கொத்துமல்லி சாதம்
Share
கொத்துமல்லி சாதம்
கொத்துமல்லி சாதம் செய்வது எப்படி
தேவையானவை:
அரிசி - ஒரு கப்,
கொத்துமல்லி - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்),
பச்சைமிளகாய் - 5,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 5 பல்,
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்,
தேங்காய் - ஒரு சிறிய துண்டு,
பட்டை - ஒரு துண்டு,
சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1
அரிசியைத் தவிர மேலே தந்துள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்),
சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்),
பூண்டு - 3 (பொடியாக நறுக்கவும்)
பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 1,
முந்திரி - 6 (உடைத்துக்கொள்ளவும்).
நெய் (அ) எண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
Method
கொத்துமல்லி சாதம் செய்முறை
அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
வெங்காயத்தை முறுகலாக வறுத்து எடுக்கவும். முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்.
பிறகு பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, பூண்டு, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
அதனுடன், 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த அரிசியை வடித்து போட்டு வேகவிடவும்
அருமையான சுவையில் கொத்துமல்லி சாதம் ரெடி!.
சிறிது வறுத்த முந்திரியையும், வதங்கிய வெங்காயத்தையும் தூவி பரிமாறவும்.
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
எலுமிச்சை சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 1602, Rating : ( 5 ) by 4 User(s).